யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் பதிவொன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (8) இரவு 8.30 மணியளவில் நல்லூர், அரசடி சந்தி, மணல்தரை வீதி பகுதியில் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
பிரபல ரௌடியான கனியென்பவர் இன்னும் 3 அடியாட்களுடன் காரில் வந்து, வாள் வெட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
28 வயதான ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் அண்மையில் பேஸ்புக்கில் ரௌடி கனி பற்றி பதிவிட்டதாகவும், அதற்கு பழிவாங்கவே வாள்வெட்டு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1