சம்மாந்துறை பிரதேசத்தில் நெய்னாகாடு வம்பியடி எனும் இடத்தில் நேற்று (03) இரவு காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இறக்காமம் 9ஆம் பிரிவைச் சேர்ந்த புஹாரி சரீப் சிபானி (றிபானி) என்ற 43 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1