Pagetamil
இலங்கை

இலங்கைக்குள் நிபா நுழைய வாய்ப்பு குறைவு!

இந்தியாவில் கேரளா உட்பட பல பகுதிகளில் பரவிவரும் கொடிய நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

பன்றிகள் மூலம் இந்நோய் பரவக்கூடும் என்பதால், பன்றிகளை மையமாக வைத்து நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பேராதனையில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று நாட்டில் கால்நடை உற்பத்தி கைத்தொழில் மற்றும் பொது சுகாதாரத்திற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தபோதே டொக்டர் ஹேமலி கொத்தலாவல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு பேசிய விவசாய அமைச்சர், நிபா வைரஸ் இலங்கைக்குள் வராமல் தடுக்க நோய் கண்காணிப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.

நாட்டுக்குள் பறவைக் காய்ச்சல் வருவதைத் தடுத்தது போன்று நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Pagetamil

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமா?

Pagetamil

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

Leave a Comment