தியாகி திலீபனை நினைவுகூர்ந்த கொழும்பின் பல பகுதிகளில் இன்று (19) நடத்த திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல்கள் சிலவற்றை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கம், அருட்தந்தை மா.சக்திவேல் உட்பட நினைவேந்தலில் கலந்துகொள்ளவுள்ள அனைவருக்கும் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்பில் அங்கம் வகித்த திலீபனை நினைவு கூருவதற்காக கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நினைவேந்தல்கள் அல்லது பூஜைகள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, மருதானை பிரதேசத்தில் இது தொடர்பான நினைவேந்தல்களை நடத்துவதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.