25.3 C
Jaffna
February 3, 2025
Pagetamil
கிழக்கு

சித்தாண்டி கால்நடை பண்ணையாளர்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது!

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 2வது நாளாக நேற்றும் (16) தொடர்ந்தது.

பெரியமாதவனை, மயிலத்தமடு பகுதியிலுள்ள தங்களது கால் நடை மேய்ச்சல் தரையில் தொடரும் சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு மேய்ச்சல் தரையை தங்களுக்கு மீட்டுத்தர கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சித்தாண்டி பால் பண்ணை முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சுழற்சி முறையிலான போராட்டத்தின் தொடர்பாக நேற்று நடைபெற்ற அடையாள உண்ணாவிரத்தில் உள்ளுர் மக்கள் பண்ணையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரம், செல்வராஜா கஜேந்திரன்  ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ப.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும், முன்னாள் கிழக்கு மாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம் மற்றும் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

east tamil

திருகோணமலையில் சிலம்பாட்ட பொங்கல் திருவிழா

east tamil

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

Leave a Comment