அளவெட்டி அரிசி ஆலையில் தீவிபத்து!

Date:

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை அரிசி ஆலை வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது. இன்று காலை 8 மணி அளவில் அரிசி ஆலை திறக்கச் சென்றபோது அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

இதன்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள், தளபாடங்கள் என்பன எரிந்து முற்றாக நாசமாகி உள்ளன.

அரிசி ஆலை உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்