புதிதாக அமைக்கப்பட்ட யாழ்ப்பாண தேர்தல்கள் திணைக்கள அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண உதவித் தேர்தல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வுல் பிரதம வருந்தினராக கலந்து கொண்டிருந்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தவிசாளர் புதிய கட்டிடத்திற்கான பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் கட்டிட த்தையும் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை காலமும் யாழ்மாவட்டச் செயலகத்திற்குள் இயங்கி வந்த தேர்தல்கள் திணைக்கள பணிகள் இனிமேல் யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்திலேயே இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.