26 C
Jaffna
December 16, 2024
Pagetamil
கிழக்கு

மோதித்தள்ளிய மன்னார் பஸ்: திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரச பேருந்தும்,சுற்றுலா வந்தவர்களை ஏற்றி வந்த பேருந்தும் கல் குவாரிக்கு விபத்துக்குள்ளானதாகவும் இதனால் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விபத்து இன்று (1) 11.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்விபத்தில் கம்பஹா பிரதேசத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மூவர் காயமடைந்துள்ளனர்.

கன்னியாவிற்கு சுற்றுலா சென்ற தனியார் பஸ் குறித்த இடத்தை தவறியமையினால் கல்குவாரிக்கு அருகில் திருப்ப முற்பட்டபோது வேகமாக வந்த அரச பஸ் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-அப்துல்சலாம் யாசீம்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

சல்லி கோயில் ஆக்கிரமிப்பு

east tamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

Leave a Comment