28.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

மன்னாரில் பாடல் போட்டியென குறிப்பிட்டு மோசடி!

இலங்கை முழுவதும் உள்ள பாடகர்களுக்கு வாய்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எவரெஸ்ர் FM என்ற பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்று முகநூல் பக்கத்தின் ஊடாக பாடல் போட்டி தெரிவை நடத்தி இறுதி போட்டி என்று அழைத்து பல இலட்சம் ரூபா வசூல் செய்து போட்டியாளர்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கண்டி, நுவரெலியா, கொழும்பு, மாத்தளை என இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து குறித்த போட்டியில் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு கலைஞர்கள் சென்று தந்திருந்துள்ளனர்.

மூன்று மாதங்களாக குறித்த போட்டியை பதிவு செய்யப்படாத வானொலி ஒன்றின் பெயரின் ஊடாக விளம்பரப்படுத்தி தென் இந்தியாவில் இருந்து பாடகர்கள் நடுவர்களாக கலந்து கொள்வதாகவும் பல இலட்சம் பெறுமதியான பரிசில்கள் இருப்பதாக தெரிவித்து கலந்து கொள்பவர்களிடம் 1750 ரூபாய் வீதம் வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு குறித்த குழுவால் தெரிவிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பண வசூல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (26) இறுதி போட்டியில் கலந்து கொண்டவர்களிடம் 1750 ரூபாயும் மற்றும் பார்வையாளர்களிடம் 400 ரூபாயும் வசூல் செய்து மண்டபத்திற்குள் அனுமதி வழங்கியுள்ளனர்.

சுமார் 1000 மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி குறித்த நிகழ்சியை பார்வையிடுவதற்காக காத்திருந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முட்டையின் விலையில் வீழ்ச்சி

east tamil

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment