பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்டில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இரட்டை சதத்தை நெருங்கியுள்ளார். அவருடன் ஆடி வரும் தனஞ்ஜய டி சில்வா 150 ஓட்டங்களை நெருங்கி ஆடி வருகிறார்.
இலங்கை- பங்களாதேஷ் அணிகளிற்கிடையிலான முதலாவது டெஸ்ட் கண்டியில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 541 ஓட்டங்கள் குவித்தது. நஜ்முல் ஹொசைன் 163 ஓட்டங்கள், மொயினுல் ஹக் 127 ஓட்டங்கள் குவித்தனர்.
பந்து வீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 96 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
பதிலளித்து ஆடும் இலங்கை இன்றைய 4வது நாளில் இதுவரை 3 விக்கெட் இழப்பிற்கு 457 ஓட்டங்களை குவித்துள்ளது.
அணித்தலைவர் திமுத் கருணரத்ன 192 ஓட்டங்களுடனும், தனஞ்ஜய டி சில்வா 141 ஓட்டங்களுடனும் ஆடி வருகிறார்கள்.
முதல் இன்னிங்சில் பங்களாதேஷை விட, 84 ஓட்டங்கள் இலங்கை பின்தங்கியுள்ளது. தற்போது போதிய வெளிச்சமின்மையால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று இன்றும் 32 ஓவர்கள் மீதமுள்ளது.
இந்த போட்டி வெற்றிதோல்வியற்ற முடிவை நோக்கி செல்லலாமென கருதப்படுகிறது.