25.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

கஜேந்திரகுமார் வீட்டை முற்றுகையிட வந்த 3 பேர்!

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடிருக்கும் பகுதிக்கு விரைவதாக தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

பெரும் எண்ணிக்கையிலான சிங்களவர்கள் அங்கு திரள்வார்கள் என உதயகம்மன்பில கூறியிருந்த போதிலும்,  ஓரிருவரே அங்கு பதாதைகளுடன் வந்தனர். எனினும், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பொலிசாரின் நீர்த்தாரை பிரயோக வாகனமும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிட, உதய கம்மன்பில அழைப்பு விடுத்திருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம்.  இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என  கம்மன்பில அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

east tamil

கிளிநொச்சியில் கொதித்தெழுந்த சிவசேனை

Pagetamil

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

Leave a Comment