29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் அடுத்த மாதம் இலங்கை வருகிறார்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை சென்று திருகோணமலைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் திகதி நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் தரைப்பாலம் மற்றும் தேசிய மின் கட்டமைப்புக்களின் இணைப்பு உள்ளிட்ட இணைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இரு நாட்டு  உயர்மட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ள சூழலில் இந்த விஜயம் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெறுகிறது.

தவிர, சீன ஆராய்ச்சிக் கப்பலான ‘ஷி யான் 6’ வருவதற்கு முன்னதாகவே இந்திய அமைச்சரின் வருகை திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியா ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது. எனினும், சீனக் கப்பலின் வருகைக்கு இலங்கை இன்னும் அனுமதி வழங்கவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment