இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அரவது சகோதரர் ரியாஜ் பதியுதீனை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை செய்யும் தடுப்புக் காவல் உத்தரவை பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று (24) அதிகாலை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று அதிகாலை வீட்டில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.