குருந்தூர் மலை ஆதிசிவன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டதை முன்னிட்டு அந்த பகுதியிலும், கோயிலுக்கு செல்லும் வீதிகளிலும் பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று குருந்தூர் ஆதிசிவன் ஆலய பொங்கல் வழிபாடு நடந்தது.
இன்றைய பொங்கலுக்கு ஏட்டிக்குப்போட்டியாக சிங்களவர்களும் விகாரைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதனால் தகராறான நிலைமையேற்படலாமென்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலயத்திலும், சுற்றயல் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஆலயத்தில் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், ஆலயத்துக்கு செல்லும் வீதியில்- குமுழமுனை சந்தியில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1