மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு ஜப்பான் தூதரகத்தால் நோயாளர் காவு வண்டி அன்பளிப்பு!

Date:

ஜப்பான் மக்களின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் இன்று காலை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் எச் .இ .மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இதனை வழங்கி வைத்த நிலையில் மூளாய் கூட்டுறவு வைத்திய சாலையினரால் யாழ் இசைக்கருவி நினைவு சின்னமாக வழங்கப்பட்டு தூதுவர் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்சியாக மூளாய் வைத்தியச்லையின் அனைத்து வசதி வாய்ப்புக்கள் குறித்தும் தூதுவர் ஆராய்ந்த நிலையில் தனது வருகையின் ஞாபகார்த்தமாக மரமொன்றினையும் வைத்தியசாலை வளாகத்தில் நாட்டி வைத்தார்.

இதன்பொழுது ஜப்பான் தூதுவர் மிசுகொசி ,தூதுவராலய அதிகாரிகள்,மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையினர் ,பணியாளர்கள்,சங்கானை பிரதேச செயலர் , வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் வடமாகாணம் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,உதவி கூட்டுறவு ஆணையாளர் யாழ்ப்பாணம் உட்பட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்