கிளிநொச்சியில் மேச்சல் நிலம் கோரி மாடுகளுடன் பண்ணையாளர்கள் இன்று
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனனர்.
கிளிநொச்சி கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கால்நடைவளர்ப்பாளர்களே
தங்களுக்குரிய மேச்சல் நிலத்தை கோரி இந்த கவனயீர்ப்பை மேற்கொண்டுள்ளனர்.
நீண்ட காலமாக தங்களுக்குரிய மேச்சல் நிலம் தொடர்பில் பல்வேறு
தரப்பினர்களிடம் கோரிக்கை விடுத்த போதும் அது தொடர்பில் எவ்வித
நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விதைப்பு மற்றும்
வறட்சியான காலங்களில் தங்களது கால்நடைகளை வளர்ப்பதில் கடும்
நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள கால்நடை வளர்ப்பாளர்கள்
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தல்
உரிய கவனம் செலுத்தி விரைவாக மேச்சல் நிலத்தை ஒதுக்கீடு செய்து தருமாறு
கோரிக்கை விடுத்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1