வடமராட்சி கிழக்கு, கட்டைகாடு மற்றும் வெத்திலைக்கேணி பகுதிகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் போது, கடற்படையினர் 11 டிங்கிகள் மற்றும் இந்த சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட அனுமதியற்ற மீன்பிடி சாதனங்களையும் சைப்பற்றியதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் மற்றும் அனுமதியற்ற வலைகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 16 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் முள்ளியான் மற்றும் சிலாபம் பிரதேசங்களில் வசிக்கும், 24 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களது உடமைகளுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.