ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வலைவீசி படுக்கைக்கு அழைத்து…படம்பிடித்து… மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது!

Date:

ஓரினச்சேர்க்கையாளர்களை வலையில் விழுத்தி, வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி பணம் பற்றித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்காக கமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செயலியொன்றையும் இந்த கும்பல் உருவாக்கியுள்ளது.

சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மோசடியில் ஏராளமானவர்கள் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

இந்த குற்றக்கும்பல் கடந்த 16ஆம் திகதி கல்கிசை பொலிசாரால் கைது செய்யப்பட்டது. இந்த கும்பலின் சூத்திரதாரியின் வயது 29. ஓரினச்சேர்க்கையாளராக செயற்பட்ட சிறுவனுக்கு வயது 16.

மவுண்ட்லவனியா பகுதியை மையமாக வைத்தே இந்த குற்றக்கும்பல் இயங்கியது.

மவுண்ட் லவனியா பகுதியில் வசிக்கும் 29 வயதான சந்தேகநபரே இந்த  நூதன கொள்ளையை திட்டமிட்டு வழிநடத்தினார்.

திருமணமான இந்த இளைஞன், உடற்கட்டமைப்பு பயிற்சியாளராகவும்,  உடலை வளர்க்கும் விட்டமின்கள் விற்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். அந்த தொழில் வருமானம் போதவில்லையென குறிப்பிட்டு, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வலைவீசியுள்ளார்.

இணைய செயலியொன்றின் மூலமும், நேரிலும் ஓரினச்சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டு, அழகான சிறுவர்கள் ஓரினச்சேர்க்கைக்கு இருப்பதாக குறிப்பிட்டு, அவர்களை குறிப்பிட்ட இடமொன்றிற்கு அழைத்து வந்து, சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்து, அந்த சமயத்தில் அவர்களை கையும் மெய்யுமாக பிடிப்பதை போல நடித்து, பணத்தை கறப்பதே இவர்களின் தொழில்.

கல்கிசை, ராகுல வீதியில் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் 21 வயதான இளைஞனும் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குகிறார். அவரது பெற்றோர்கள் உயர் அரச பதவிகளை வகிக்கிறார்கள். பெற்றோர் வீட்டுக்கு சென்ற பின்னர், அந்த வீட்டிலேயே ஓரினச்சேர்க்கையாளர்கள் அழைத்து வரப்பட்டு பணம் பறித்துள்ளனர்.

இந்த கும்பல் ஒரு வைத்தியரையே முதல்முதலில் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

அவர்கள் உருவாக்கிய செயலி மூலம் வைத்தியர் ஒருவரை ஓரினச்சேர்க்கையாளராக அடையாளம் கண்டு கொண்டனர்.

மவுண்ட்வலனியா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் பயிலும் அழகான சிறுவன், அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம் என அந்த கும்பல் குறிப்பிட்டதை நம்பிய வைத்தியர், சிறுவனுடன் தொடர்பை ஏற்படுத்தி உரையாட தொடங்கினார்.

இதன்படி, ராகுல வீதியிலுள்ள நண்பனின் வீட்டிற்கு வைத்தியர் அழைத்து வரப்பட்டுள்ளார். படுக்கையறையில் சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட தொடங்கிய போது, வீட்டுக்குள் மறைந்திருந்த இருவர் படுக்கையறைக்குள் நுழைந்து வைத்தியரை கையும் மெய்யுமான பிடித்துக் கொண்டனர்.

தம்மை சிறுவனின் சகோதரன் என குறிப்பிட்டு, வைத்தியரை தாக்கியுள்ளனர். அந்த சமயத்தில் பிரதான சந்தேகநபரும் அந்த வீட்டுக்கு வந்துள்ளார். அவர்கள் அனைவரும் இணைந்து வைத்தியரை தாக்கி, நிர்வாணமாக்கி வீடியோ படம் பிடித்துள்ளனர்.

இந்த கட்சிகளை சமூக ஊடகங்களிளும், வைத்தியரின் மனைவியிடமும் பகிரப போவதாக மிரட்டியுள்ளார். அப்படி பகிராமலிருப்பதெனில் பணம் தருமாறு கேட்டு, சில இலட்சம் ரூபா பணத்தை பறித்துள்ளனர்.

இதன்பின்னர், ஒரு வருடமாக இந்த மோசடியை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளனர்.

சட்டத்தரணிகள், தொழிலதிபர்கள், அரச உயர் அதிகாரிகள், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிர்வாக அதிகாரி, இலங்கை விமானப்படையின் பணியாளர், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, இதே விதமாக பணம் பறித்துள்ளனர்.

பாணந்துறையை சேர்ந்த சிவில் பொறியியலாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின அடிப்படையிலேயே குற்றக்கும்பல் சிக்கியது. அந்த ஆசிரியரும் திருமணமாகி குழந்தைகளுடன் வசிக்கிறாார்.

சிவில் பொலியியலாளர், செயலி மூலம் 16 வயது சிறுவனுடன் அறிமுகமாகி, மவுண்ட் லவனியாவிலுள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.  அவர் சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டார்.

அவரிடமிருந்து 2 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டது.

இந்த மோசடிக்கும்பலை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டுமென நினைத்தவர், பொலிசாரிடம் முறையிட்டார்.

பொலிசாரின் விசாரணையில் 5 பேர் கொண்ட குற்றக்கும்பல் கைது செய்யப்பட்டது. கைதான பிரதான சந்தேகநபருக்கு 29 வயது. குற்றத்திற்காக வீட்டை வழங்கிய 21 வயதானவரும், சிறுவனின் நண்பன் மற்றும் சகோதரன் போல நடித்த மோசடி கும்பலின் 26,27 வயதானவர்களும கைதாகினர்.

பாடசாலை மாணவனான 16 வயது சிறுவன், ஓரினச்சேர்க்கையாளர்களை வலையில் விழுத்தி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மாநாடு அறிவார்ந்த போராட்ட வடிவமாகும்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது...

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்