புங்குடுதீவு, இறுப்பிட்டி பிரதேசத்தில் மாட்டு கன்றை திருடி, இறைச்சியாக்கிய 3 பேர் பெதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (22) இந்த சம்பவம் நடந்தது.
மாட்டுக் கன்றை திருடிய கும்பல் ஒன்று, அதை இறைச்சியாக்கும் தகவலறிந்து சென்ற பிரதேச மக்கள் 3 பேரை மடக்கிப்பிடித்து, முறையாக கவனித்து, பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மாட்டுத் திருடர்களில் இருவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்தவர்கள். புங்குடுதீவில் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்துள்ளனர்.




