பிறந்தநாள் விழாவில் காதலியின் நிர்வாண புகைப்படங்களை பல நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 6 மாணவர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (13) உத்தரவிட்டுள்ளது.
குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இந்த புகைப்படங்கள் மற்றவர்களுக்கு வெளியிடப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
காதலன் என்று கூறப்படும் சந்தேக நபர், காதலியை பிரிந்த பின்னர் தனது பிறந்தநாள் விழாவில் இந்த ஆபாச காட்சிகளை தனது நண்பர்களிடையே பகிர்ந்துள்ளார்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கிய நீதவான், நாளை மறுதினம் முறைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.