கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட ரயில் இன்று வியாழக்கிழமை (13) பயணித்தது.
இந்த விசேட ரயிலில் போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.
இந்த விசேட ரயிலானது அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை மாலை 3 மணியளவில் வந்தடைந்தது.
போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணரத்னவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1