26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
சினிமா

‘பலர் காதலித்து ஏமாற்றி விட்டார்கள்’: நடிகை வேதனை

கதாநாயகிகள் பொதுவாக தங்கள் சொந்த வாழ்க்கை காதல் அனுபவங்களை வெளிப்படுத்த விரும்புவது இல்லை. ஆனால் பிரபல இந்தி, பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ள ஷெஹ்னாஸ் கில் காதலித்து தன்னை ஏமாற்றியவர்கள் பற்றிய கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.

இவர் இந்தி நடிகர் சித்தார்த் சுக்லாவை காதலித்தார். ஆனால் சித்தார்த் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.

ஷெஹ்னாஸ் கில் அளித்துள்ள பேட்டியில், “நான் காதல் விஷயத்தில் உண்மையாகவே இருந்தேன். யாரையும் மோசம் செய்யவில்லை. ஆனால் என்னை நிறைய பேர் காதலித்து ஏமாற்றினார்கள். காதலுக்கு துரோகம் செய்தனர். அந்த தோல்விகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அதில் இருந்து வெளியே வர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.

இந்த காலத்தில் நான் எல்லோருக்கும் சொல்லும் விஷயம் ஒன்றுதான். காதலை முறித்து விட்டு தூரமாக சென்று விட நினைத்தால் அதை உடனே செய்யுங்கள். இனிமேல் நான் யாரையும் காதலிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். உண்மையான அன்பு கிடைத்தால் காதலிப்பேன்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

Leave a Comment