24.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் முதல்முறையாக கைப்பற்றப்பட்ட புதிய வகை போதைப்பொருள்!

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வகை போதைப்பொருள் மொரட்டுவ சமன்புர பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இருந்து இன்று (5) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

4MMC என்ற போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும், இலங்கையில் இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு கோடீஸ்வர வர்த்தகர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இனந்தெரியாத போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மொரட்டுவ சமன்புர பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மூன்று மாடி வீடொன்றை இன்று காலை சுற்றிவளைத்த விசேட பொலிஸ் குழு, கோடீஸ்வர வர்த்தகரின் 29 வயதுடைய மகனைக் கைது செய்துள்ளது.

பொலிசார் சுற்றிவளைத்தபோது, போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்தார் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அப்போது சந்தேகநபரிடம் மேற்படி போதைப்பொருள் 115 கிராம் இருந்தது.

சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலின் பிரகாரம், இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வரும் மற்றுமொரு கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதுடன், அத்திடிய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்திடிய பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் 30 வயதுடையவர் எனவும் அவர் படகு மற்றும் படகு இயந்திர வியாபாரம் செய்து வருவதாகவும் இலங்கை மற்றும் மாலைதீவில் பல வர்த்தக நிறுவனங்களை வைத்திருப்பவர் எனவும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி

east tamil

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளம்செழியன் அவர்கள்

east tamil

நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் காலமானார்

east tamil

வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்ல தடை

east tamil

மன்னார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு – வழி நடத்தியவர் வெளிநாட்டில்!

east tamil

Leave a Comment