26.5 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

‘யாழ்ப்பாண பொலிசாரினுடையதை போன்ற பொய் வழக்குகளாலும் நீதிமன்ற தாமதம் ஏற்படுகிறது’: நாடாளுமன்றத்தில் சாள்ஸ் எம்.பி

பொலிசார் தாக்கல் செய்யும் பல பொய் வழக்குகளாலும் நீதிமன்ற தாமதம் ஏற்படுகிறது. இதற்கு உதாரணமாக யாழ்ப்பாண பொலிசார் அண்மையில் தாக்கல் செய்த பொய் வழக்கில், நீதிமன்றத்தில் 3 தவணைகள் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.

நாடாளுமன்றத்தில் இன்று (5) உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

இன்று நீதிமன்றத்தில் வழக்கு தாமதங்களை பற்றி பேசுகிறோம். நீதிமன்ற வழக்கு தாமதங்களிற்கு பொய் வழக்குகள் தாக்கல் செய்வதும் ஒரு முக்கிய காரணம். இதற்கு ஒரு உதாரணம், அண்மையில் யாழ்ப்பாண பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கு. அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனால் இதில் 7 பேருக்கு எதிராக மட்டும் யாழ்ப்பாண பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். தமக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பொதுமக்கள் யாரும் முறைப்பாடு செய்யவில்லை. பொலிசார் காழ்ப்புணர்ச்சியினால் இந்த பொய் வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 3 தவணைகள் நடைபெற்று விட்டது என்றார்.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கு தொடர்பில் தம்மால் செயற்பட முடியாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச செயற்பட்டார்.

இந்த வழக்கில் செயற்படும்படி கேட்கவில்லையென்றும், பொய் வழக்குகளால் நீதிமன்ற தாமதம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டவே இதனை தெரிவித்ததாக சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

பொடி லெஸ்ஸி இந்தியாவில் கைது!

Pagetamil

கரையொதுங்கிய மர்ம படகில் 18 புத்தர் சிலைகள் மீட்பு

east tamil

அம்பாந்தோட்டையில் சீனாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

east tamil

நெல்லுக்கான உத்தரவாத விலை தேவை

east tamil

தேசிய மக்கள் சக்தியினர் மீது வாள்வெட்டு

east tamil

Leave a Comment