காதலித்து ஏமாற்றிய இளைஞனை, யுவதியொருவர் கடத்திச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பாணந்துறை, பின்வத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடத்தப்பட்ட இளைஞனும், யுவதியும் காதலித்து வந்துள்ளனர். யுவதியுடன் உல்லாசமாக இருந்ததுடன், அவரிடமிருந்து பணத்தையும் இளைஞன் பெற்றுள்ளார். எனினும், தற்போது அந்த யுவதியை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
மேலும் பலருடன் முச்சக்கர வண்டியில் வந்த யுவதி பின்வத்த பிரதேசத்தில் வைத்து இளைஞனை கடத்திச் சென்று வெறிச்சோடிய வீடொன்றில் அடைத்து வைத்த பின்னர், விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட யுவதி பாதுகாப்பு துறையுடன் தொடர்புடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.
அவரையும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கண்டுபிடிக்க பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1