26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
விளையாட்டு

வரலாற்றில் முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகள் இல்லாத உலகக்கோப்பை ஆட்டங்கள்!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் தோல்வி கண்டு மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியுள்ளது.

தகுதி சுற்றில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்கொண்டது ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி.

முதலில் களமிறங்கிய அந்த அணி, 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹோல்டர் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடி, 45 ரன்கள் எடுத்திருந்தார்.

ஸ்கொகாட்லாந்து அணி 43.3 ஓவர்களிவ் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மத்தேயு றி குரஸ் ஆட்டமிழக்காமல் 74, பிரல்ண்டன் மெக்முலன் 69 ஓட்டங்களை பெற்றனர். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த தோல்வியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அந்த அணி 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல் 10 அணிகளில் இடம்பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறை.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு முறை (1975 மற்றும் 1979) சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இல்லாமல் நடைபெறபோகும் முதல் உலகக்கோப்பையாக இது அமையப்போகிறது.

தகுதி சுற்று ஆட்டங்களில் மேற்கிந்திய தீவுகள் அணி, அமெரிக்காவை (35 ரன்கள் வித்தியாசத்தில்) மற்றும் நேபாளத்தை (101 ரன்கள் வித்தியாசத்தில்) தோற்கடித்து இருந்தாலும், சிம்பாப்வேயிடம் தோல்வி, சூப்பர் ஓவர் எலிமினேட்டர் முறையில் நெதர்லாந்திடம் தோல்வி என்று, மற்ற அணிகளை விடக் குறைவான புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் இல்லாமலே சூப்பர் சிக்ஸ் சுற்றில் நுழைந்தது.

இந்த பிரிவில் 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றியடைந்தால் மாத்திரமே உலகக்கோப்பையை பற்றி அந்த அணி சிந்திக்கலாம் என்ற நிலையில், தற்போது ஸ்கொட்லாந்திடமும் தோல்வி கண்டதன்மூலம் முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment