25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

UPDATE: வட்ஸ்அப்பில் வரும் யாழ் யுவதியின் நிர்வாண படங்கள்: இரு இளைஞர்களின் வீடுகளிற்குள் புகுந்து தாக்கிய கிராம மக்கள்!

அண்மையில் திருமணம் முடித்த இளம் யுவதியொருவரின் படத்தை கணினி வரைகலை மூலம், நிர்வாண புகைப்படமாக சித்தரித்து சமூக ஊடங்கள் மூலம் வெளியிட்ட குற்றச்சாட்டில், புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் அவர்களைத் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

அச்சுவேலி பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவத்தில் இளைஞர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த இளம் யுவதியொருவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அவரது முகம் இணைக்கப்பட்ட நிர்வாணப்படங்கள் கடந்த சில நாட்களாக வட்ஸ்அப் இலக்க்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இலக்கத்தை தடை செய்தால் பிறிதொரு இக்கத்திலிருந்து புகைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக ஊரில் சந்தேகம் எழ இநேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு குவிந்து இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதை தடுத்த நிலையில் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பெண்ணின் படங்களை சமூக ஊடகங்கள் ஊடாக பகிர்ந்த தொலைபேசி இலக்கத்தை அடையாளம் காணும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment