மாணவி மாயம்!

Date:

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் தரம் 9ம் கல்வி கற்கும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் (20) பாடசாலைக்கு சென்று இரவு வரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில்; தரம் 9 இல் கல்வி கற்றுவரும் 15 வயதுடைய சிறுமி சம்பவதினமான நேற்று முன்தினம் வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்று பின் பாடசாலை முடிவடைந்து மாலைரை வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர்.

குறித்த சிறுமி பாடசாலைய முடிவடையும்வரை பாடசாலையில் இருந்துள்ளதாகவும் பின்னர் பாடசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் பாடசாலைக்கு செல்லும்போது பாடசாலை பையில் உடைகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் 50 ரூபா பணம் தாயிடம் வாங்கிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகம்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்