27 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இலங்கை

அதிகரித்த வரி அறவீட்டுக்கு எதிராக கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்கள் கடைகளை மூடி எதிர்ப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகங்கள் இன்று (23)
சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி எதிர்ப்பு
போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

மே மாதம் தொடக்கம் தங்களிடம் அதிகரித்த வரி அறவீடு மேற்கொள்வதற்கு
எதிராக இவ் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 1500 ரூபா வரி மற்றும் கழிவகற்றலுக்காக ஒவ்வொரு
வியாபாரியிடமும் மாதாந்தம் பெறப்பட்டு வந்த நிலையில் மே மாதம் தொடக்கம்
7500 ரூபா வரியாகவும் 600 ரூபா கழிவகற்றலுக்கும் என 8100 ரூபா
அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தே
சந்தை வியாபாரிகள் தங்களது வியாபார நிலையங்ளை மூடி போராட்டத்தில்
ஈடுப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சயைால் விலை மதிப்பீட்டுக்கு கோரிக்கை
விடுக்கப்பட்டு அதற்கமைவாக அதற்கமைவாக வலை மதிப்பீடு செய்யப்பட்டே
அதிகரித்த வரி அறவிடப்படுவதாக கரைச்சி பிரதேச சபையின் உத்தியோகத்தர்
ஒருவர் தெரிவித்துள்ளார். இது சட்டரீதியானது எனவும் இதனை
மேற்கொள்ளாதுவிடின் கணக்காய்வு விசாரணைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை
உருவாகும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் பேராட்டத்தில் ஈடுப்பட்ட சந்தை வர்த்தகர்கள் சார்பாக வர்த்தக
சங்க பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை சந்தித்து தங்களிது
கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுசாலைகளை மூடக் கூறி கண்டன பேரணி

east tamil

பெண்ணொருவருடன் சேட்டை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்

east tamil

சட்ட விரோதமாக மரங்களை வெட்டிய இருவர் கைது

east tamil

இலங்கையின் மூத்த பாடகர் காலமானார்.

east tamil

இந்தியாவுடனான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி

Pagetamil

Leave a Comment