26.3 C
Jaffna
December 20, 2024
Pagetamil
கிழக்கு

மாட்டிறைச்சி தொடர்பில் முக்கிய தீர்மானம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உணவிற்காக மாடுகளை அறுப்பது தொடர்பிலும் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு உழ்ஹிய்யா வழங்குவதற்காக மாடுகளை அறுப்பது தொடர்பிலும் தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று 2023.06.20 ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆடு, மாடுகளை அறுப்பதற்கான விசேட பொறிமுறைகளை வகுத்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தத்தமது பிரதேசங்களில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்ப் பரவலின் தன்மை மற்றும் ஏனைய சுகாதார நடைமுறைகளை கவனத்திற் கொண்டு உலமா சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் விசேட தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்பாளர் அவர்களினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் மாறாக அனுமதி பெறப்படாமல் நோய்வாய்ப்பட்ட மாடுகளை அறுப்பவர்களுக்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை மாவட்டச் செயலக ஒளி விழா

east tamil

விவசாயிகளுக்கான பசளை விநியோகம்

east tamil

நிரம்பியது கந்தளாய் குளம்

east tamil

மட்டக்களப்பில் சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான செயலமர்வு

east tamil

அம்புலன்ஸ் விபத்து

east tamil

Leave a Comment