25.5 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

தினேஷ் ஷாப்டரின் கையடக்க தொலைபேசி, சிம்மை மனைவியிடம் வழங்க எதிர்ப்பு!

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஸ் ஷாஃப்டரின் மரண விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டவற்றின் அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்ட பல இரத்த மாதிரிகள் உட்பட வழக்குத் தயாரிப்புகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய குறிப்பிட்டார்.

அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் இருந்து இந்த அறிக்கைகளைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தேவைப்பட்டால், இந்த அறிக்கைகள் குறித்து அரசாங்க பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல் அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மேலதிக நீதவான் கூறினார்.

இதேவேளை, தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி மற்றும் சிம் அட்டையை அவர்களது உறவினர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்க பகுப்பாய்வாளர் எதிர்ப்பு தெரிவித்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் உறவினர்களிடம் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை வழங்கிய பின்னர், அவர்கள் இணையத்துடன் இணைக்கும் போது அதில் உள்ள தரவுகள் அழிக்கப்படலாம் எனவும், தொலைபேசி மற்றும் சிம் அட்டை தொடர்பான விசாரணைகளில் இன்னும் முடிக்கப்படவில்லையென தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் மோசடி

Pagetamil

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி, நடத்துனருக்கு கத்திக்குத்து!

Pagetamil

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இராஜினாமா

east tamil

17 இந்திய மீனவர்கள் கைது

east tamil

Leave a Comment