பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி பகுதியில் இன்று (15) பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத வேட்டைப்பொறியில் சிறுத்தை சிக்கியது.
தேயிலைத் தோட்டத்தில் புல் வெட்டுவதற்குச் சென்ற ஒரு தோட்டத் தொழிலாளி சிறுத்தையை கண்டு, பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேட்டைப்பொறியில் நேற்று மாலை சிறுத்தை சிக்கியிருக்கலாமென கருதப்படுகிறது.
சிறுத்தையை மீட்கும் நடவடிக்கையில் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1