25.1 C
Jaffna
March 6, 2025
Pagetamil
சினிமா

ஆதரவற்ற நிலையில் இறந்த துணை நடிகர்: முன்னின்று இறுதிச் சடங்குகளை செய்த டி.இமான்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் காலமான துணை நடிகர் பிரபுவின் உடலுக்கு இசையமைப்பாளர் டி.இமான் முன்னின்று இறுதிச் சடங்குகளை செய்தார்.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்தவர் பிரபு. தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு பிரபுவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாததால் சிரமப்பட்டு வந்த இவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் அவ்வப்போது பொருளாதார உதவிகள் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 15) பிரபு சிகிச்சை பலனின்றி காலாமானார். உறவினர்கள் யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த அவரது உடலுக்கு இசையமைப்பாளர் டி.இமான் நேரில் சென்று இறுதிச் சடங்குகளை செய்தார். மேலும் அவரது உடல் தகனத்தின்போது தன் கையால் கொள்ளி வைத்தார். டி.இமானின் இந்தச் செயலை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment