யாழ்- சென்னைக்கு இடையில் 100வது விமானசேவை

Date:

சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயான அலையன்ஸ் எயர் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வது விமானப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நூறாவது சேவையை நினைவு கூரும் முகமாக இன்றைய தினம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் கேக் வெட்டி நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதரக துணை தூதுவர், பலாலி விமான நிலைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அலையன்ஸ் எயார் விமானம் மீண்டும் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை 10,500க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் இடர்காலத்தில் இடைநிறுத்தத்திற்குப் பிறகு விமான சேவை 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் தொடங்கியது.

இந்தியத் தூதரகத்தின் அறிக்கையில் இச்செயற்பாடானது இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என கூறியுள்ளதோடு அதிகரித்த இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தூண்டி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்றுள்ளது,

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில்...

கயிறிழுத்தல் போட்டியில் உயிரிழந்த இளைஞன்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் உள்ள மிகஹாவெல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கயிறு...

அணு ஆயுதங்கள் அல்ல, ஈரானின் பலமாக மாறிய புவியியல் அமைவிடம்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருக்கலாம் — ஆனால், அத்தகைய நீர்வழிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்