தோட்டக் கிணற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவியை மர்ம நபர் ஒருவர் பிடித்து துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக நிட்டம்புவ தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
மாணவி குளித்து விட்டு, துவாய் அணிந்தபடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது இருட்டில் மறைந்திருந்த ஒருவர் திடீரென அவரை கட்டிப்பிடித்து, அவர் அணிந்திருந்த துவாயை கழற்றி தரையில் வீசி பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக முறையிடப்பட்டுள்ளது.
மகளின் அலறல் சத்தம் கேட்ட தாய் உடனடியாக அங்கு ஓடிச்சென்ற போது, மாணவியை விட்டுவிட்டு மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார்.
தாயும் மகளும் சந்தேக நபரை அடையாளம் கண்டு பொலிஸில் புகார் அளித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.




