தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சற்குணதேவி மருதங்கேணி பொலீசாரால் வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட காரணம் ஏதும் வீட்டார் யாருக்கும் தெரிவிக்கப்படாது வாகனத்தில் ஏற்றிச் சென்று தற்போது மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
மருதங்கேணியில் அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இந்த விவகாரத்திலேயே சற்குணதேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அவர் தற்போது கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




