Pagetamil
இலங்கை

நடாஷாவுக்கு உதவிய குற்றச்சாட்டில் யூடியூப்பர் கைது!

பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் நடாஷா எதிரிசூரியவின் நகைச்சுவை நிகழ்ச்சியை யூடியூப் சனலில் வெளியிட்டு அவருக்கு ஆதரவளித்ததாக கூறப்படும் சமூக ஆர்வலர் புருனோ திவாகர இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யூடியூப் சனலை நடத்தி, மதச் சுதந்திரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களைப் பரப்பி, சம்பந்தப்பட்ட நபருக்கு உதவியதற்காக, புருனோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விசாரணைகள் தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக இன்று பிற்பகல் புருனோ திவாகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், சுமார் 8 மணிநேர வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட புருனோ திவாகரவிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், நாளை (1) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாமனாரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

east tamil

பஸ்களில் தேவையற்ற உபகரணங்களை அகற்ற 03 மாத கால அவகாசம்

east tamil

பேருந்து ஓட்டுநர்களுக்கான வயது வரம்பு அறிவிப்பு

east tamil

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கைக்கு புதியதல்ல!

Pagetamil

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

Leave a Comment