இயக்குநர் பாண்டிராஜ், சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கி இருந்தார் . இந்தப் படம் கடந்த வருடம் மார்ச்மாதம் வெளியானது.
இதையடுத்து அவர் விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில், ‘கதகளி’ படத்தில் விஷால் ஏற்கெனவே நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது.
இதையடுத்து விஷாலும் பாண்டிராஜும் மீண்டும் இணைகின்றனர். இதின் படப்பிடிப்பு அடுத்த மாதம் திருச்சியில் தொடங்குகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க, கீர்த்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
‘கஸ்டடி’ படத்துக்குப் பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1