கொழும்பில் உள்ள நட்சத்திர இரவு விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த இரண்டு யுவதிகளை பகிர்ந்து கொள்வதில் கண்டி மற்றும் கொழும்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் குழுக்கள் கடுமையாக சண்டையிட்டு கொண்டுள்ளனர்.
இந்த சண்டையில் கொழும்பைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் காயமடைந்து அவர்களில் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோதலின் பின்னர் தப்பிச் சென்ற கண்டி இளைஞர்கள் குழுவை கைது செய்ய குருந்துவத்தை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த யுவதிகள் பேலியகொட மற்றும் ராஜகிரிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த இரவு விடுதியில் நடனமாடுவதற்காக அடிக்கடி வந்து செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரவு முதல் காலை வரை பல்வேறு இளைஞர்களுடன் நடனமாடி, நெருக்கமாக இருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கண்டியை சேர்ந்த இளைஞர்கள் குழு இந்த யுவதிகளை தம்முடன் நடனத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்த போதே இந்த சண்டை இடம்பெற்றுள்ளது.