ஓமந்தை – வேலர்சின்னக்குளம் பகுதியில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றி, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில்,52 வயதான ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் (21) இரவு 10.30 மணி மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
அங்குள்ள குளக்கரையில் வைத்து 52 வயதானவரை இடியன் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
காயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய 28 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழைய தகராற்றினால் ஏற்பட்ட கோபத்தில், மதுபோதையில் நியதானமிழந்து துப்பாக்கியால் சுட்டு விட்டதாகவும், தான் தவறு செய்து விட்டேன் என்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன் பொலிசாரிடம் தெரிவித்தார்.
கைதானவரை வவுனியா நீதிமன்றத்தில் நிறுத்தியதையடுத்து, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-வவுனியா நிருபர் ரூபன்-