கடற்படை மற்றும் பொலிசார் நேற்று (22) திருகோணமலை காசிம்நகர், குச்சவெளியில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 54 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 50 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
காசிம்நகர் பகுதியில் குச்சவெளி பொலிஸாருடன் இணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனை செய்த பிறகு, அந்த வீட்டில் இருந்து இந்த 54 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 50 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களை சோதனைக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த வீட்டிலிருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காசிம்நகரைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் வெடிபொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.