முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஞ்சனின் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளிப்பது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி தனக்கு அறிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது அங்குனுகோலபெலெச சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1