வடக்கு ஆளுனரின் வாசஸ்தலத்தில் மந்திரிக்கப்பட்ட பொருட்கள்!

Date:

யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தங்கி இருந்த நிலையில் குறித்த இல்லத்தில் இருந்து இந்து மத குரு ஒருவரின் உதவியுடன் மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உரிய முறையில் அழிக்கப்பட்டதாக ஆளுநர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாள்ஸ் அவர்கள் எதிர்வரும் வாரம் பதவியேற்க உள்ள நிலையில் வாசஸ்தலத்தினை தூய்மையாக்கும் பணி செயலக ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டபோது, ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உள்ள அறைகளில் போத்தல்களில் அடைக்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட பொருட்கள் காணப்பட்டதை அவதானித்த ஊழியர்கள் குறித்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.

இதையடுத்து, அதிகாரிகள் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது அவை மந்திரிக்கப்பட்ட பொருட்கள் எனவும் அவற்றினை நிலத்தில் கிடங்கு வெட்டி புதைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு இந்து மத குரு ஒருவர் வரவழைக்கப்பட்டு மந்தரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரிய முறையில் அகற்றப்பட்டு நிலத்தில்கிடங்கு வெட்டி புதைக்கப்பட்டன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்