நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவை பெற்றோசோ வரை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டு வந்த இருவர், கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் தாதி ஒருவரின் கணவர் உட்பட மூவருக்கு நேற்று (14) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட, குறித்த இரண்டு பேரும் சுகயீனம் காரணமாக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு மருந்து எடுக்க சென்றனர். அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டதாக பொது சுகதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இதேவேளை குறித்த வைத்தியசாலையில் தாதியாக கடமைபுரிந்து வருபவரின் கணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரில் ஒருவர் வலப்பனையையும் மற்றையவர் பேராதனையைச் சேர்ந்தவர் எனவும் மூன்றாமவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.
தொற்றுக்குள்ளான மூவரையும் கொரோனா சிக்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளது.