Pagetamil
இலங்கை

வெளிநாடு செல்பவர்களிற்கு யாழ் போதனாவில் இலவச பிசிஆர்: கோப்பாய் சிகிச்சை மையத்தில் 3 வேளை சோறு ஏன்?

கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார்

யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

வட மாகாணத்தைப் பொறுத்தவரை கொவிட் 19தொற்று அதிகரித்து வருகின்றது அதேபோல யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றும் இன்றும் ஆக இரண்டு மரணங்கள் கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கின்றது. அதில் நேற்று 77 வயதும் மற்றவர் இன்று காலை 59 வயதான ஒருவரும் மரணமாய் இருக்கிறார்கள். அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்து யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட பிரிவில் தகுந்த கண்காணிப்பு கூடி இருந்தவர்கள். அவர்கள் கொவிட் தொற்று காரணமாக நேற்றும் இன்றும் மரணமாகி இருக்கின்றார்கள்.

எனவே இது தொடர்பில் மக்களின் விழிப்புணர்வு மிக அத்தியாவசியமாக காணப்படுகின்றது. அந்த வகையில் நமது வைத்தியசாலையில் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை செய்திருக்கின்றோம். உதாரணமாக இப்பொழுது நமது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பெறுபவர்களுக்கு சத்திரசிகிச்சை கூடத்திற்று செல்வோர் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்த பின்புதான் அவர்களை சத்திர சிகிச்சைக்கான அனுமதிக்கின்றோம்.

அதேபோல விபத்து பிரிவில் வருபவர்கள் உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டி இருப்பின் அவர்களுக்கு பிசி ஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே சிகிச்சைக்காக அனு மதிக்கின்றோம்.

அந்த வகையில் தினமும் 75 தொடக்கம் 100 பேருக்குபிசி ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது.

அதேபோல் நாளாந்தம் 400 பேருக்குரிய பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்தோடு எமது வைத்தியசாலையில் விடுதிகளில் 5 நாட்களுக்கு மேல் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்து இருக்கின்றோம்.

இதன் மூலம் நமது வைத்தியசாலையை கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கின்றோம். பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவையாக இருக்கின்றது.

பொதுவாக நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையினை குறைந்து இருக்கின்றோம். அதில் மக்கள் தமது கணிசமான ஒத்துழைப்பினை வழங்குகின்றார்கள்.

மேலும் இன்னும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. வைத்தியசாலை ஒரு முக்கியமான இடம் இவ்வாறான இடத்தில் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குபொதுமக்களின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்பவர்களிற்கு யாழ் போதனா வைத்தியசாலையில் இலவசமாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வோம். விமான சேவை நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, அவர்கள் எமது பிசிஆர் பரிசோதனை அறிக்கையை ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் யாழ் போதனா வைத்தியசாலையில் இலவச பிசிஆர் சோதனை மேற்கொள்ளலாம்.

சில விமான சேவை ரிக்கெட் முகவர்கள் பணத்தை அறவிட்டு விட்டு பரிசோதனைக்கு எம்மிடம் அனுப்புவதாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வெளிநாடு செல்பவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வெளிநாடு செல்லும் விமான ரிக்கெட், கடவுச்சீட்டை காண்பித்து இலவச பிசிஆர் சோதனை மேற்கொள்ளாம்.

கோப்பாய் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமான உணவு வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வியெழுப்பிய போது,

இராணுவத்தினர்தான் உணவு விநியோகிக்கிறார்கள். தேசிய கொள்கையின் அடிப்படையில்தான் உணவு வழங்கப்படுகிறது. அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நெல்லுக்கான உத்தரவாத விலை தேவை

east tamil

தேசிய மக்கள் சக்தியினர் மீது வாள்வெட்டு

east tamil

மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை – பொலிஸ் தீர்மானம்

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

அர்ச்சுனாவை தகுதி நீக்கும் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

Leave a Comment