ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்) அமைப்பின் தலைவரான அபு அல் ஹுசைன் அல் ஹுசைனி அல் குராஷியை துருக்கி உளவுப் படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
துருக்கிய உளவுத்துறையினர் ஐஎஸ்ஐஎல் குழுவின் தலைவர் என்று கூறப்படுபவரை நீண்ட காலமாக கண்காணித்து வந்ததாக எர்டோகன் கூறினார்.
“சனிக்கிழமை சிரியாவில் துருக்கிய தேசிய புலனாய்வு அமைப்பின் நடவடிக்கையில் அந்த நபர் கொல்லப்பட்டார்” என்று எர்டோகன் ஞாயிற்றுக்கிழமை TRT Turk ஒளிபரப்பாளருக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பயங்கரவாத அமைப்புகளுடன் எவ்வித பாகுபாடும் இன்றி எமது போராட்டத்தை தொடர்வோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
துருக்கி ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்டு, துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான, வடக்கு சிரிய நகரமான ஜின்டெரெஸ் அருகே இந்தத் தாக்குதல் நடந்ததாக சிரிய உள்ளூர் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்) தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. சிரிய தேசிய இராணுவம், அப்பகுதியில் பாதுகாப்பு பிரசன்னம் கொண்ட ஒரு எதிர்க்கட்சி பிரிவு, உடனடியாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
வடக்கு சிரியாவின் ஜின்டெரெஸ் அருகே, ஒரு இஸ்லாமிய பள்ளியாக பயன்படுத்தப்படும் கைவிடப்பட்ட பண்ணையை குறிவைத்து துருக்கியின் உளவுத்துறை முகவர்களும் உள்ளூர் இராணுவப் பொலிஸாரும் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குடியிருப்பாளர்கள் AFP இடம் தெரிவித்தனர்.
ஒரு குடியிருப்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒரே இரவில் நகரத்தின் எல்லையில் மோதல்கள் தொடங்கின, சுமார் ஒரு மணி நேரம் மோதல் நீடித்தது. ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது என்றனர்.
பின்னர் அந்த பகுதியை யாரும் நெருங்க விடாமல் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
ISIL (ISIS) குழு 2014 இல் ஈராக் மற்றும் சிரியாவின் பரந்த பகுதிகளைக் கைப்பற்றியது, அந்த நேரத்தில் அதன் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி மில்லியன் கணக்கான மக்கள் வசிக்கும் பகுதி முழுவதும் இஸ்லாமிய கலிபாவை அறிவித்தார்.
ஆனால், சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க ஆதரவுப் படைகள் மற்றும் ஈரான், ரஷ்யா மற்றும் பல்வேறு துணை இராணுவப் படைகளின் ஆதரவுடன் சிரியப் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் பிடியை இழந்தனர்.
அபு பக்கர் அல்-பாக்தாதி அமெரிக்காவின் நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.
அல்-குராஷி நவம்பர் 2022 இன் பின்னர் ISIL (ISIS) தலைவராக ஆனார்.
எஞ்சியுள்ள ஐஎஸ் போராளிகள் இப்போது பெரும்பாலும் சிரியா மற்றும் ஈராக்கின் தொலைதூர பகுதிகளில் மறைந்துள்ளனர், மேலும் அவ்வப்போது தாக்குதல்களை நடத்துகிறார்கள்.
The compound allegedly housing #ISIS’s global leader was located outside the town of #Jinderes, surrounded by fields of olive trees.
The area was hit very hard by the earthquake, resulting in many visits by foreign media & some aid groups.
See these images from @faizaldoghim060 pic.twitter.com/2M3oqTesTk
— Charles Lister (@Charles_Lister) April 30, 2023