வாட்ஸ்அப் theme இயல்பாகவே பச்சை நிறத்தில் தான் இருக்கும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். இந்த வாட்ஸ்அப் நிறத்தை இளஞ்சிவப்பு (Pink) நிறமாக மாற்றுவதாகக் கூறும் Link உடன் ஒரு போலியான மெசேஜ் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.
அது உண்மையிலேயே போலியான மெசேஜ் மட்டுமல்ல, அது ஒரு போலியான வைரஸ். அதை தப்பித்தவறிகூட கிளிக் செய்ய வேண்டாம். இது ஒரு வைரஸ் என்பதால் அந்த Link ஐ நீங்கள் கிளிக் செய்தால் சைபர் கிரிமினல்கள் உங்கள் தொலைபேசியை ஹேக் செய்யக்கூடும். அதுமட்டுமில்லாது, உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நீங்களே பயன்படுத்த முடியாமலும் போகலாம்.
அதில், “வாட்ஸ்அப் Pink ஜாக்கிரதை!! ஒரு APK பதிவிறக்க இணைப்புடன் வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு வைரஸ் பரவுகிறது. #WhatsappPink என்ற பெயருடன் வரும் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். அப்படி கிளிக் செய்தால் உங்கள் தொலைபேசியின் முழுமையான அணுகலையும் நீங்கள் இழக்கப்படும்” என்று இதில் கூறியுள்ளார்.
இது போன்ற மெசேஜ்கள், உங்களுக்கு SMS, email, வாட்ஸ்அப் மெசேஜ் என இதில் வந்தாலும் நீங்கள் தவிர்த்து விட வேண்டும். இதை உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அந்த இணைப்புடன் உங்களுக்கு மெசேஜ் ஏதேனும் வந்தாலும் அதை தவிர்த்து விடுங்கள். தவறுதலாக நீங்கள் அந்த இணைப்பைக் கிளிக் செய்து அதில் சொல்வது போல apk என ஏதேனும் நீங்கள் டவுன்லோடு செய்தால் உங்கள் வாட்ஸ்அப் தகவல்கள் உங்கள் போனில் உள்ள அனைத்து தகவல்களும் திருடு போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.