கிளி பாதரின் நினைவு நிகழ்வு!

Date:

படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் நினைவு நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி பாதர்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது விசேட வழிபாடுகள் நடைபெற்றது.

இதேவேளை இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஜோசப் பிரான்சிஸ் அடிகளாருக்காகவும் மன்றாடப்பட்டது.

அதனை தொடர்ந்து கிளிபாதர் அவர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கொழும்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மட்டக்களப்பு திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட வணபிதா கனகரட்ணம் (கிளி பாதர்) வடகிழக்கு மனித உரிமைகள் பணிப்பாளராகவும் யுத்த காலங்களில் மக்களுக்கு மனிதாபிமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

20-04-2008 அன்று ஞாயிற்றுக்கிழமை மல்லாவி வன்னிவிளான்குளம் அம்பாள்புரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் ஆராதனையில் கலந்து விட்டு தனது வாகனத்தில் திரும்பிக்கொன்ன்டு இருந்த பொழுது கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் –

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்