28.8 C
Jaffna
March 6, 2025
Pagetamil
இலங்கை

இலங்கைக்குள் பெருமளவு போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைதான முன்னாள் போராளி உள்ளிட்ட 5 பேர் விடுதலை!

196 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை இறக்குமதி செய்தமை மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் போராளி உள்ளிட்ட 5 பேரையும்  விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற ட்ரயல் அட்-பார் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஆறு மாத குறுகிய காலப்பகுதியில் முடிக்கப்பட்ட இந்த வழக்கைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்க அரசாங்கத் தரப்பால் முடியவில்லை என கொழும்பு உயர் நீதிமன்ற ட்ரயல் அட்-பார் அவதானித்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது கிடைத்த சாட்சியங்களை கருத்திற் கொண்ட கொழும்பு உயர் நீதிமன்ற ட்ரயல் அட் பார், வழக்கு விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அரசு தரப்பு சாட்சியங்களில் முரண்பாடுகள் இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஆதித்ய படபெந்திகே, மஞ்சுள திலகரத்ன மற்றும் மகேஷ் வீரமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

முன்னதாக, 198 கிலோ ஹெரோயின் இறக்குமதி மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபரால் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய கொழும்பு மேல் நீதிமன்றில் ட்ரயல் அட் பார் நியமித்திருந்தார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 196 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த போது, கடலில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசரால் விசேட ட்ரயல் அட் பார் பெஞ்ச் நியமிக்கப்பட்டது. .

இந்த குழுவின் தலைமை நீதிபதியாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேல் நீதிமன்ற நீதிபதிகளான மஞ்சுள திலகரத்ன மற்றும் மகேன் வீரமன் ஆகியோர் நீதிபதிகள் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21, 2019 அன்று ‘St.Anthony’ என்ற மீன்பிடிக் கப்பலில் இருந்து 196.986 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் பொதிகள் அடங்கிய 13 பைகளை கொண்டு வந்த போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் வடக்கு சர்வதேச பெருங்கடலில் கைது செய்யப்பட்டனர்.

ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் அநுர சமிந்த அப்புஹாமி, தவராசா சுதாகரன், அகிலேசப்பிள்ளை தவராசா, லசந்த பிரியலால் அப்புஹாமி மற்றும் கந்தையா சந்திரகுமார் ஆகிய 5 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம ஆஜரானதுடன், சட்டத்தரணிகளான காமினி அல்விஸ் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சார்பில் ஆஜராகியிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்னக்கோன் பற்றி தகவலறிந்தால் சிஐடிக்கு அறிவிக்கவும்!

Pagetamil

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தாயும், மகனும் பலி

Pagetamil

மேர்வின் சில்வா கைது!

Pagetamil

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!