தென்மராட்சியில் காப்பெற் வீதிக்கு கொங்கிறீட் போட்டவர், உடைத்து அகற்றினார்!

Date:

தென்மராட்சியில் குடியிருப்பாளர் ஒருவரால் காப்பற் வீதியின் மேலாக சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த கொங்கிறீட் உடைத்து அகற்றப்பட்டுள்ளது. தமிழ்பக்கத்தில் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து, சாவகச்சேரி நகரசபையினர் நடவடிக்கையெடுத்ததை தொடர்ந்து, கொங்கிறீட் உடைத்து அகற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட சங்கத்தானையில் குடியிருப்பாளர் ஒருவர் காப்பற் வீதியை மூடி கொங்கிறீட் போட்டிருந்தார். இதனால் வீதியில் பயணிப்போர் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இதனை அகற்றுமாறு பலமுறை நகரசபையால் குறித்த குடியிருப்பாளருக்கு அறிவித்தல் விடுத்தும் கொங்கிறீட் அகற்றப்படவில்லை.

இந்நிலையில் குடியிருப்பாளரின் விசித்திர செயற்பாடு தொடர்பாக தமிழ்பக்கம் சு்ட்டிக்காட்டியிருந்தது.

இதையடுத்து சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் சிவமங்கை இராமநாதன் குறித்த குடியிருப்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதையடுத்து வீதியில் போடப்பட்டிருந்த கொங்கிறீட் அகற்றப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில். பெண் படுகொலை – தடயவியல் பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின்...

சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

4 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை  பொலிஸாரால்...

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்